தக்காளியின் தோல் நீக்க.....
கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
தக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் சிறிது கீறிவிட்டு10 நொடிகள்சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாகக் கழன்று விடும்.
பஜ்ஜி மாவில் சிறிது வெள்ளை எள், கடுகு, தேங்காய்த்துருவல் மூன்றையும் சேர்த்தால் பஜ்ஜி சுவையாக இருக்கும். *
வெங்காய சாம்பார் செய்யும்போது தேங்காயுடன் வெங்காயத்தை வதக்கி அரைத்து குழம்பில் சேர்க்க ருசியும். மணமும் பிரமாதமாக இருக்கும் .
உளுந்து அப்பளம் நான்கு எடுத்து அடுப்பில் சுட்டுத் தூளாக்கி, அதில் தயிரை சேர்க்க. திடீர் தயிர் பச்சடி தயார்.
0
Leave a Reply