25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


தாமரை விதை  “மக்கானா “
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாமரை விதை “மக்கானா “

மக்கானா, தமிழில் தாமரை விதை என்று அழைக்கப்படுகிறது. இதன் ஊட்டச்சத்து காரணமாக பலரும் இதை சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் எப்படி சாப்பிடுவது, இன்னும் சுவையான உணவாக இதை எப்படி உட்கொள்வது .

மக்கானாவை வறுத்து பவுடர் போல் பொடியாக்கிக்கொள்ளுங்கள். பின் பாலில் கொதிக்க வையுங்கள். க்ரீமியாக கிடைக்கும். பின் அதில் உங்களுக்கு பிடித்த பழங்களை கட் செய்து அதன் மேல் பாதாம் நட்ஸுகளை தூவுங்கள். பின் அதன் மேல் அப்படியே தேனை ஊற்றுங்கள். இப்போது அது கூடுதல் ஆரோக்கியம் நிறைந்த வாய்க்கு ருசியான உணவாகிவிட்டது.

வறுத்த மக்கானாவை பவுலில் சேர்த்து அதோடு கோஸ் இலைகள், காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் டிரெஸ்ஸிங் க்ரீம்கள்( தயிர் அல்லது பனீர் அரைத்து சேர்க்கலாம்) சேர்த்து கலந்துவிட சுவையான மக்கானா சாலட் தயார். பனீர், சிக்கன், சோயா, வேக வைத்த பயிர் வகைகள் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.

வறுத்த மக்கானாவில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி மற்றும் ஸ்பைசி சாட் பொடிகள் சேர்த்து அதோடு எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து சாப்பிடலாம். கூடுதல் க்ரஞ்சி சுவைக்கு மாதுளை பழம் சேர்த்து மக்கானா சாட்  சாப்பிடலாம்.

வறுத்த மக்கானாவில் நெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதன் மீது உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலா சேர்த்து கலந்து சாப்பிடலாம்.மிக்ஸ் வித் மக்கானா : வறுத்த மக்கானாவுட்ன் நட்ஸ் , விதைகள், டிரை ஃப்ரூட்ஸ் ஆகியவை சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

பால் நன்கு காய்ச்சி கொதிக்க வைத்து பின் வறுத்த மக்கானா சேர்த்து கலந்துவிடுங்கள். அதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பாயாசம் போல் வந்ததும் இறக்கிவிடுங்கள். இப்போது நெய் ஊற்றி முந்திரி, பாதாம் வறுத்து அதில் சேர்த்து கலந்துவிட்டு குடிக்கலாம். அசத்தல் சுவையாக மக்கானா கீர்  இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News