பட்டாம்பூச்சியை பாதுகாக்க ….
இயற்கை ஆச்சரியமானது.ஒரே இடத்தில் நீண்ட காலம் வாழும் உயிர்கள் தங்களுக்குள் உதவிக் கொள்கின்றன. ஒரு சில உயிரினங்கள் குறிப்பிட்ட சில தாவரங்களை மட்டுமே நம்பியுள்ளன. ஒருவேளை அந்தத் தாவரம் அழிந்துவிட் டால் அதைச் சார்ந்துள்ள அந்த உயிரினமும் அழிந்துவிடும்.
அப்படிப்பட்ட ஓர் உயிரினம் தான். இஸ்ரேல் நாட்டில் உள்ள பட்டாம்பூச்சி இனமானடொமேர்ஸ் நெசிமேசஸ் (Tomares nesimachus). லார்ஜ் ப்ரூடட் மில்க்வெட்ச் (largefruited milkvetch) எனும் ஒரு குறிப்பிட்ட தாவரத்தைச் சார்ந்தே வாழ்கிறது. இதில் தான் தன் முட்டைகளை இடுகிறது. இந்தத் தாவரம் அருகிவிட்டது. அதனால், பட்டாம்பூச்சியின் எண்ணிக்கையும் மிக வேகமாகச் சரிந்து வருகிறது.
இஸ்ரேலில் உள்ள கேகேஎல் ஜேஎன்எப் எனும் அமைப்பினர், அந்த நாட்டின் இயற்கை ஆர்வலர்களுடன் சேர்ந்து, அழிந்து வரும் இந்தத் தாவரத்தை மீட்க முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக இந்தத் தாவரத்தின் 60 விதைகளைச் சேகரித்து பாதுகாக்கப்பட்ட சூழலில் வளர்த்து வருகின்றனர். நன்றாக வளர்ந்ததும் காட்டில் நடுவர். இதன் வாயிலாக அரு கிவரும் தாவரம், பட்டாம்பூச்சி இனம் இரண்டையும் காப்பாற்ற முடியும்.
0
Leave a Reply