25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


முடி அடர்த்தியாக வளர ....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முடி அடர்த்தியாக வளர ....

. மரவள்ளிக் கிழங்கு தோல் மற்றும் பல்வேறு சரும பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தருகிறது. இவற்றின் தோலை சீவி, கூழாக்கி, அதை, உங்கள் முகத்தில் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் நல்ல பலனை அடையலாம்.இவை, முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசையை வெளியேற்றுவதுடன், துளைகளை மூடுகிறது. இதனால், சருமம் புத்துணர்ச்சி அடைந்து, பொலிவைப் பெறுகிறது .வளி மண்டல நிலையாலும், குறைந்த அளவு ஊட்டச்சத்துகளாலும் நமக்கு தலை முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு நல்ல தீர்வை தருகிறது. இதற்கு மரவள்ளிக் கிழங்கை கூழாக்கி, தலையில் பூசி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஊற விட்டு அலசி வரவும். இதேபோல் வாரத்திற்கு, இரண்டு முறை செய்து வந்தால், முடி முன்பை விட அடர்த்தியாக வளரும்.

மரவள்ளிக் கிழங்கு எண்ணெய்  இதனை ஆங்கிலத்தில் burdock root oil என்று அழைப்பர். இது அழகு சாதன கடைகளில் கிடைக்கும். இது முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் மிக முக்கியமான எண்ணையாகும்வாழைப்பழத்தில் தேவைப்படும் அதிக கனிமச் சத்துக்களும், விட்டமின்களும் இருப்பதால் முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.பழுத்த வாழைப்பழம் - 1 மரவள்ளி கிழங்கு எண்ணெய் - 7 ஸ்பூன்,வாழைப்பழத்தை மசித்து அதனுடன் எண்ணெயை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் ஸ்கால்ப்பில் தடவி ஷவர் கேப்பினால் மூடிக் கொள்ளுங்கள்.அரை மணி நேரம் கழித்து தலைமுடியை ரசாயனம் அல்லாத ஷாம்புவினால் அலசுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News