வயிற்று வலி நீங்க முருங்கை இலை சாறு.
ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் தேக்கரண்டி தேன் விட்டு நன்றாக கலக்கி குடிக்கலாம்.முருங்கை இலை சாறு2 தேக்கரண்டி வீதம் இரண்டு வேலை பருக வயிற்று வலி நீங்கும். முருங்கை இலை சாறு ஒரு தேக்கரண்டி உடன் தேன் கலந்து சாப்பிட்டால் நாக்குப்பூச்சிகள் அழிந்து வயிற்று வலியும் போகும்.முருங்கையிலையை தண்ணீர் ஊற்றி வேகவைத்து, அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலேஏராளமான நோய்கள் குணமாகின்றன. தேவைப்பட்டால், இந்த முருங்கை நீரில் எலுமிச்சம் பழச்சாறு, சிறிது நெல்லிக்காய் சாறையும் கலந்து குடித்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.இயற்கையாகவே நச்சு நீக்கும் தன்மை இந்த முருங்கைக்கு உள்ளதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த தூண்டுகிறது. வாய்ப்புண்ணும், வயிற்றுப்புண்ணும் ஆறுகிறது. முருங்கை கீரை சாறு, குடித்து வந்தால் உடல் சூடு மெல்ல தணிந்துவிடும்.
0
Leave a Reply