“Coffee With Collector” என்ற 69-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் பயிலும் 150 க்கும் மேற்பட்ட முதல் முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுடன் நடைபெற்ற சிறப்பு “Coffee With Collector” என்ற 69-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பதன் அவசியம் தொடர்பாக கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ ஃ மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது, மக்களவைத் தேர்தல் 2024 எதிர் வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் பயிலும் 150 க்கும் மேற்பட்ட முதல்முறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று 69-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.வெளிப்படையான, நியாயமான முறையில் பொதுமக்களுடைய பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் தெரிவுமுறைக்கு பெயர்தான் தேர்தல். இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்கள், இந்திய தேர்தலின் வரலாறு குறித்தும், தேர்தலில் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவம் குறித்தும், ஜனநாயக கடமையை எல்லோரும் ஆற்ற வேண்டும் என்பதின் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
0
Leave a Reply