25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தென்னாட்டு காந்தி படிக்காத மேதை கர்மவீரர் பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த காமராஜர் 121 வது பிறந்த தினம் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தென்னாட்டு காந்தி படிக்காத மேதை கர்மவீரர் பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த காமராஜர் 121 வது பிறந்த தினம் 

காமராஜர் தமிழகத்தின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை என்ற தம்பதிக்கு 1903ஆம் ஆண்டு ஜூலை15ஆம்தேதி மகனாய் பிறந்தார். தனது தொடக்க பள்ளி படிப்பை தனது சொந்த ஊரான விருதுநகரில் சத்திரிய வித்யா சாலா என்ற பள்ளியில் பள்ளி படிப்பினை துவங்கிய சிறிது காலத்தில் அவரது தந்தை இறந்தகாரணமாக அவரால்தொடந்துபடிக்கமுடியவில்லை.அவரது தாய் அவரை மிகவும் கடினப்பட்டு வளர்த்தார். தாயின் கஷ்டத்தை உணர்ந்த காமராஜர் தனது படிப்பினை துறந்து தன்னுடைய அம்மாவிற்காக, அவரது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். காமராஜர் தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்யும் பல தலைவர்கள் உரையாற்றுவதை பார்த்து அவர்களது போராட்ட குணத்தால் ஈர்க்கப்பட்டு 1920ஆம் ஆண்டு தனது16ஆவது வயதில் காங்கிரஸ் கட்சியில்தன்னைஇணைத்துக்கொண்டார். அன்றுமுதல் அவர் மக்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் எண்று தனது மனதிற்குள் கணக்கு போட்டு அதன்படி நடக்க ஆரம்பித்தார்.மொத்தமாக அவரது வாழ்நாளில்9 ஆண்டுகள் மக்களுக்காக அவர் சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-1940 விருதுநகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி கைதாகி வேலூர் சிறை சென்றார். சிறையில் இருந்தவாறே விருதுநகர் நகரத்தின் நகராட்சி தலைவர் போட்டியில் நின்று வெற்றி கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் முதன்மை பேச்சாளரும் தலைவருமான சத்தியமூர்த்தியின் மேல் இருந்த மதிப்பின் காரணமாக அவரை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். சத்யமூர்த்தியுடன் தனது நல் உறவினை தொடர்ந்தார். சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவரான போது காமராஜரை செயலாளராக நியமித்தார். மத்தியில் காங்கிரஸ் பலமாக இருந்தாலும் தமிழகத்தில் தனது பலத்தினை இழந்தது. இதன் காரணமாக ராஜாஜி தனது முதல்வர் பதவியினை துறந்தார். மேலும் தனக்கு பதிலாக சுப்பிரமணியம் என்பவரை நிறுத்தினார். ஆனால் சட்டசபையில் காமராசருக்கு இருந்த செல்வாக்கின் அடிப்படியில் ஓட்டெடுப்பில் வென்று1953ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழகத்தின் முதல்வர் ஆனார். அமைச்சரவை குழுவினை கூட்டி தமிழக பள்ளி தேர்ச்சி மற்றும் எண்ணிக்கை குறித்து அமைச்சர்களிடம் பேசினார் . அவர்களிடம் ஆலோசித்த பிறகு காமராஜர் ஒரு முடிவுக்கு வந்தார். மாணவர்கள் பள்ளிக்கு வர முதலில் நாம் ஒரு வழி செய்யவேண்டும் என்று நினைத்த அவர் மதியஉணவு அளித்தால் கண்டிப்பாக ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்று முடிவு செய்து மதிய உணவு திட்டத்தினை துவங்கினார்.. தமிழகத்தில் மூடி இருந்த6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். மேலும்17000க்கும் மேற்பட்ட பள்ளிகளை தமிழகம் முழுவதும் உள்ள சின்ன சின்ன கிராமங்களுக்கு அவரே சென்று திறந்து வைத்தார் தமிழக இளைஞர்கள் படித்து முடித்து வேலை செய்யவேண்டும் என்று தனது முற்போக்கு சிந்தனையில் அவர் பல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தார் . மின்சாரம் மற்றும் நீர்வளதுறைகள் மீதும் நாட்டம் கொண்டிருந்த அவர் அந்தத்துறையிலும் பல வியக்கதகும் திட்டங்களை கொண்டுவந்து ஆச்சரியப்படுத்தினார் மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த அவர் பதவியைவிட மக்களின் முன்னேற்றமும் மற்றும் கட்சியின் முன்னேற்றத்தினையும் மனதில் வைத்துக்கொண்டு தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்தார். மக்களுக்காக செய்த மக்கள் தலைவன் காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய72 வது வயதில் காலமானார். எளிமையின் மறுமுகம் காமராஜர்.: ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தும் சாகும் வரை அவர் வாடகை வீட்டிலேயே வசித்தார். மேலும் கதர் ஆடையினை மட்டுமே வைத்திருந்தார். மேலும் அவரது வங்கிக்கணக்கில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வைப்புத்தொகை இல்லை. தனக்காக அனைத்தையும் செய்யும் அரசியல் வாதிகளின் மத்தியில் இப்படி ஒரு அரசியல்வாதி ,இப்படி ஒரு தலைவன் கிடைப்பது என்பது மிக அரிதே 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News