சென்னை சேப்பாக்கத்தில் 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சியுடன்கோலாகலமாக தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் இரவில் நடந்த வண்ணமயமான தொடக்க விழாவில், முதலில் இந்தி நடிகர் அக்ஷய்குமார் தேசிய கொடியுடன் அந்தரத்தில் மிதந்தபடி மேடையில் அட்டகாசமாக தோன்றினார். தொடர்ந்து தேசிய கொடியுடன் நுழைந்த இந்தி நடிகர் டைகர் ஷெராப்பும் அவரும் கலக்கலாக நடனமாடி குதூகலப்படுத்தியதுடன் மோட்டார் சைக்கிளில் உற்சாகமாக வலம் வந்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வந்தே மாதரம், ஜெய் ஹோ, பாடலை அற்புதமாக பாடி பரவசமூட்டினார். இந்திபாடகர்கள் சோனு நிகாம், மொகித் சவுகான், பாடகி சுவேதா மோகன் உள்ளிட்டோரும் இசை குரலோசையில் கிறங்கடித்தனர். இன்னொரு பக்கம் மைதானத்தில் நிலவில் சந்திரயான் விண்கலம் இறங்குவது, இந்தியா கேட்,போன்ற காட்சிகளை கிராபிக்சில் தத்ரூபமாக காண்பித்தனர். 33 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது மார்ச் 22-ம்தேதி முதல் ஆட்டமான சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் களம் இறங்கியது. முதலில் பேட்டிங் செய்த பெங்களுரு அணி 174 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 176 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது.
0
Leave a Reply