இந்தியா பில்லி ஜீன் கோப்பை டென்னிசில் 2-வது வெற்றி .
.பெண்கள் அணிகளுக்கான 6 அணிகள் பங்கேற்றுள்ள ,பில்லி ஜீன் கோப்பை டென்னிசில் ஆசிய-ஓசியானா குரூப்1 போட்டி டெல்லியில் ,நேற்றுநடந்த ஆட்டத்தில் இந்திய அணி, மங்கோலியாவை சந்தித்தது.
இந்திய வீராங்கனைகள் ஜீல் தேசாய் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் அனு விஜின் கான்டோரையும், சஹஹா யமலாபள்ளி 6-0, 6-0 என்ற நேர்செட்டில் ஜர்கல் அல்டன்சர்னாயையும் ஒற்றையர் ஆட்டங்களில் தோற்கடித்தனர்.
இந்தியாவின் வைஷ்ணவி அட்கர்-ருதுஜா போசாலே இணை 6-1, 6-0 என்ற நேர்செட்டில் கோங்கோர்சுல் அல்டர்கிஷிக்-ஜர்கல் அல்டன்சர்னா ஜோடியையும் இரட்டையர் பிரிவில் தோற்கடித்தது.
இந்திய அணி 3–0 என்ற கணக்கில் ,மங்கோலியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.
0
Leave a Reply