25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில்  95.06 சதவிகிதம் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில் நான்காவது மாவட்டமாக நமது மாவட்டம் இடம் பெற்றுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் 95.06 சதவிகிதம் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில் நான்காவது மாவட்டமாக நமது மாவட்டம் இடம் பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் /ஏப்ரல் 2024 -ல் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 223 பள்ளிகளைச் சேர்ந்த 98 தேர்வு மையங்களில் 10,441 மமாணவர்களும், 11,887 மாணவியர்களுமாக மொத்தம் 22,328 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.  இதில் 9656 மாணவர்களும், 11,568 மாணவியர்களும் என மொத்தம் 21,224 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விழுக்காடு 95.06 சதவீதம் பெற்று தேர்ச்சி சதவீதத்தில் தமிழ்நாட்டில் 4-ஆவது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.மேலும், அரசுப் பள்ளிகள் 7, சமூக நலப்பள்ளிகள் 1, உதவி பெறும் பள்ளிகள் 16, பதின்மப் பள்ளிகள் 37 என  மொத்தமாக 61 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மாவட்ட அளவில் எம்.லோகேஷ் என்ற மாணவர் 596/600 மதிப்பெண்களும் அதனைத் தொடர்ந்து ஆர்.மணீஷ் என்ற மாணவர் 593/600 மதிப்பெண்களும் அதனை தொடர்ந்து வி.ஸ்ரீசக்திகோமதி, கே.அபர்ணா, எம்.சஷ்சித்ராம், கே.லக~னா ஆகிய மாணவர்கள் 592/600 மதிப்பெண்களும் பெற்று இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
இயற்பியல் பாடத்தில் 24 மாணவர்கள், வேதியியல் பாடத்தில் 7 மாணவர்கள், கணித பாடத்தில் 14 மாணவர்கள், கணினி அறிவியல் பாடத்தில் 121 மாணவர்கள், உயிரியல் பாடத்தில் 1 மாணவர்,வரலாறு பாடத்தில் 2 மாணவர்கள், பொருளியல் பாடத்தில் 16 மாணவர்கள், வணிகவியல் பாடத்தில் 10 மாணவர்கள், கணக்குப் பதிவியல் பாடத்தில் 9 மாணவர்கள், வணிக கணிதம் பாடத்தில் 7 மாணவர்கள், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 12 மாணவர்கள், அடிப்படை மின் பொறியியல் பாடத்தில் 7 மாணவர்கள், அடிப்படை இயந்திரவியல் பாடத்தில் 35 மாணவர்கள், செவிலியல் பாடத்தில் 63 மாணவர்கள்,  ஆடை வடிவமைப்பு பாடத்தில் 58 மாணவர்கள், வேலைவாய்ப்புத் திறன்கள் பாடத்தில் 6 மாணவர்கள், தட்டச்சு பாடத்தில் 42 மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News