உயிருக்கு ஆபத்து வரும் திரவ நைட்ரஜன் ஸ்மோக் வகை உணவு
திரவநிலை :-ன்ன நைட்ரஜனில் பிஸ்கட்டை நனைத்து, அதை உண்ணும்போது நைட்ரஜன்,காற்றின் வெப்பத்தில் ஆவியாகிறது. அதை உண்ணும்போது வாயில் இருந்தும். மூக்கின் துவாரங்களில் இருந்தும், புகை கிளம்புகிறது. திரவ நிலையில் நைட்ரஜன் இருக்கும் போது அதன் வெப்பநிலை, மைனஸ் 196 டிகிரி யாக இருக்கம். பிஸ்கட்டை திரவ நைட்ரஜனில் முக்கி கையில் எடுத்து, வாயில் போட வேண்டும். அந்த சில நொடி நேரத்தில், திரவ நைட்ரஜன் ஆவியாக விடும். ஆனால், திரவ நைட்ரஜனை அப்படியே பருகினால், அதீத குளிர்ச்சியான அது, நேரடியாக சுவாசப் பாதை, உணவு குழாய் போன்றவற்றில் புண்களை ஏற்படுத்தும். எவ்வாறு கடுமையான வெப்பம் ,தீக்காயங்களை ஏற்படுத்துமோ, அதே போல், அதீத குளிர் தன்மையும் தீங்கை ஏற்படுத்தும்.
சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் தாவணகெரேவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன், கடுமையான வலியில் துடிதுடித்த வீடியோ, இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.குழந்தைகளுக்கு :- ஒரு பொருளை சாப்பிட தருவதற்கு முன், அதன்பாதுகாப்பு தன்மையை உறுதி செய்வது. பெற்றோரின் கடமை, எனவே அப்பொருளின் தன்மை குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு அவசியம்.
0
Leave a Reply