25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

கடந்த சில மாதங்களாகவேAI தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக காணப்படுகிறது. விஞ்ஞான தொழில்நுட்பத்தின் புதிய பரிணாம வளர்ச்சியாகAI பார்க்கப்படுகிறது.. இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டுவதற்குAI தொழில்நுட்பத்தை பலரும் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்து இறந்தவர்களை கூட அவர்கள் பேசுவது போல காட்ட முடியும் என்பதால் பல துறைகளிலும் இதை பயன்படுத்துகிறார்கள்..

ஒருபக்கம் சாப்ட்வேர் துறையில்Coding எழுதுவதற்கும் கூடAIRobot களை வல்லுனர்கள்பயன்படுத்துகிறார்கள். இனி வரும் காலத்தில்AIதவிர்த்து விட்டு மனிதன் வாழவே முடியாது என்கிற நிலை உருவாகும் என சொல்லலாம். அதோடுAI வந்துவிட்டதால் மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும் எனவும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது..

இந்நிலையில்தான், அதானி குழுமம் AI துறையில் முதலீடு செய்ய முன் வந்திருக்கிறது. இந்தியாவில் Hypersacale AI Centre-களை அமைக்க சுமார் 9 லட்சம் கோடி மதிப்பிலான மெகா முதலீட்டு திட்டத்தை அதானி குழுமம் அறிவித்திருக்கிறது. டெல்லி AI Impact மாநாட்டை ஒட்டி அதானி குழுமம்இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.

மேலும், 2035ம் ஆண்டுகளுக்குள் இதை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்திருக்கிறது.. இது தவிர சுமார் 13 லட்சம் கோடி மதிப்பில் கம்ப்யூட்டர் சர்வர்கள் உற்பத்தி மற்றும் கிளவுட் சேவைகளில் முதலீடு செய்யவுள்ளதாகவும் அதானி குழுமம் அறிவித்திருக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News