பிரண்டைகுளம் கண்மாய் நீர்த்தேக்க பகுதியில் ஆகாயதாமரை ஆக்கிரமிப்பு
இராஜபாளையம் முடங்கியாறு ரோட்டில் தாலுகா அலுவலகம் அருகே பிரண்டைகுளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் தற்போதைய மழையால் நீர்வரத்து காணப்பட்டு நிரம்பும் நிலையை எட்டி உள்ளது. ஆனால் நீரின் முழு பரப்பளவிலும் தெரியாத அளவிற்கு ஆகாயத்தாமரைச் செடிகள் வளர்ந்து போர்வை போல் மூடியுள்ளது.
இதனால் நீரில் வாழும் மீன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் தடுத்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் நீரின் தரம் மாற்றமடைந்து பாதிப்பதாக தெரிவிக்கின்றனர்.
தற்போது நெல் பயிரிட்டு, கோடையில் தண்ணீர் வரத்து உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளோம். இருப்பினும் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாய தாமரை நீரை வேகமாக ஆவி ஆக்குவதுடன் துர்நாற்றம் ஏற்படும் விதமாக மாற்றி விடுகிறது. இதில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள் நீரில் மூழ்கும் போது அழுகி துர்நாற்றம் வீசுகிறது. நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்காண்மாயில் தாமரைச் செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply