.பாசிப்பருப்புஉருண்டை.
தேவையான பொருட்கள் :
1/4 கிலோ பாசிப்பருப்பு
1/4 கிலோ சீனி
10 முந்திரிபருப்பு
150 மி.லி நெய்
செய்முறை
பாசிப்பருப்பை வறுத்து மாவு மில்லில் குடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
சீனியை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்
காடாயில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும், பின் அதே கடாயில் மீதமுள்ள நெய்யை ஊற்றி சூடாக்கவும், பாசிப்பருப்பு மாவையும், சீனி மாவையும் சேர்த்துக்கொள்ளவும்.
அந்த மாவில் வறுத்த முந்திரியையும், சூடான நெய்யையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும், இப்போது சுவையான, சத்தான பாசிப்பருப்பு உருண்டை .
0
Leave a Reply