மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, இணைய வழியில் சீரற்றமயமாக்கல்(Randomization) முறையில் வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும் பணி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (05.04.2024) மக்களவை பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, இணைய வழியில் சீரற்றமயமாக்கல்(Randomization) ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் பணி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா,I A S, அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 07.04.2024 அன்று அந்தந்த தொகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply