25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய் ஜூஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய் ஜூஸ்

வெண்டைக்காய் ஜூஸில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடம்பில் கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகரிக்கும் பொழுது இதயம் சார்ந்த நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். வெண்டைக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும்.வெண்டைக்காய் ஜூஸில் நிறைந்துள்ள கால்சியம் எலும்புகளின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. வெண்டைக்காய் ஜூஸை தொடர்ந்து குடித்து வர எலும்பு சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உடம்பில் இரத்த பற்றாக்குறை உள்ளவர்கள் அல்லது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்குவெண்டைக்காய் ஜூஸ் நல்லது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இதன் மூலம் இரத்த சோகையிலிருந்தும் விடுபடலாம்.வெண்டைக்காய் ஜூஸில் வைட்டமின்களும் புரதங்களும் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வெண்டைக்காய் ஜூஸை தொடர்ந்து குடித்து வர நுண்கிருமிகளால் ஏற்படக்கூடிய தொற்றுகளை தவிர்க்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *