“தவறாமல் 100 சதவீதம் வாக்களிப்போம் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பூங்கா
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலவநத்தம் ஊராட்சியில் (26.03.2024) மக்களவை பொது தேர்தல்-2024 நடைபெற்று வருவதை முன்னிட்டு, “தவறாமல் 100 சதவீதம் வாக்களிப்போம் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பூங்காவில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், மலைவாழ் மக்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாலவநத்தம் ஊராட்சியில் “தவறாமல் 100 சதவீதம் வாக்களிப்போம் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்த விழிப்புணர்வு பூங்காவில் சுமார் 400-க்கும் மேற்பட்ட தேக்கு, மகாகனி, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள், மருத்துவச் செடிகள், பூச்செடிகள், தோட்டக்கலை பயிர்கள் ஆகியவை நடப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகளை கம்பி வேலிகள்; அமைத்து பாதுகாக்கவும், போர்வெல் மூலம் மரக்கன்றுகளுக்கு தேவையான தண்ணீர் வசதியை பூர்த்தி செய்யவும், பூங்காவினை பராமரிக்கவும் ஊராட்சித்;துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும், நேர்மையான, நியாயமான முறையில் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் வரையப்பட்டிருந்த விழிப்புணர்வு கோலங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திருமதி விசாலாட்சி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி வாசுகி, உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply