ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளி, இராஜபாளையம் திறமை காணும் விழா
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் திறமை காணும் விழா 16.3.24.சனிக்கிழமை அன்று ஆனந்தா கார்டனில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மித்ரா மாண்டிசோரி பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரிகார்த்திகா கஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்.பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. ஜெயபவானி அவர்கள் விழாவிற்கு வருகை தந்தஅனைவரையும் வரவேற்று சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.பள்ளித்தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார்.
மேலும் அவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களைப் பாராட்டினார்.எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பாடல், நடனம், பேச்சு, ஓவியம்,சிலம்பம்,பறை மற்றும் கீ போர்டு போன்ற கலைகளில் தங்களது திறமைகளை வெளிகாட்டினார்கள்.
எல்.கே,.ஜி மற்றும் யு.கே.ஜி மாணவர்கள் அருமையான இசைக்கு நாகரிக நடை நடந்துஅனைவரையும் கவர்ந்தார்கள்.சிறப்பு விருந்தினர் தனது உரையில்நான்ஒருகலைஞன்என்பதைநினைவில்வைத்துக்கொள்ளவேண்டும்என்றும்,தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.மேலும் அவர் அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் பற்றிய கதை ஒன்றும் கூறி,அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன், நிர்வாகக் குழு அலுவலர் திரு வெங்கட பெருமாள் மற்றும் எல். ஐ .சி திரு வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியர் திருமதி தீபா நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.
0
Leave a Reply