அர்ஜுன், பிரக்ஞானந்தா உலக கோப்பை செஸ் தொடரில், 'டிரா', ...
உலக கோப்பை செஸ் 1வது சீசன் கோவாவில். மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர்.உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், 3வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, பிரனவ், கார்த்திக் வெங்கடராமன் என 5 வீரர்கள்,நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.
அர்ஜுன், ஹங்கேரியின் பீட்டர் லெகோவை, நேற்று துவங்கிய நான்காவது சுற்றில்சந்தித்தார். போட்டி துவங்கிய ஒரு மணி நேரத்தில் இருவரும் 'டிரா' செய்ய சம்மதித்தனர். ஸ்கோர் 0.5-0.5 என சமனில் உள்ளது.
பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் டேனில் டுபோவை எதிர்கொண்டு துவக்கத்தில் பின் தங்கிய பிரக்ஞானந்தா, 41 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். பிரனவ்-உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக், ஹரிகிருஷ்ணா - சுவீடனின் கிரான்டெலியஸ், கார்த்திக்வெங்கடராமன்-சீனாவின் லியம் லீ மோதிய முதல் போட்டிகள் நான்காவது சுற்றில் 'டிரா' ஆகின.
0
Leave a Reply