25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்

 ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 15 தங்கம், 6 வெள்ளி, 22 வெண்கலம் 43 என, பதக்கம் கைப்பற் றிய இந்தியா 2வது இடத்தை கைப்பற்றியது.ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டானில், 17 15, வயதுக்குட்பட்டோருக்கான நடந்தது. இதன் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவுக்கு 11 தங்கம், 3 வெள்ளி, 11 வெண்கலம் என, 25 பதக்கம் கிடைத்தது. நேற்று 17 வயதுக்குட்பட்டோருக்கான பைனல் நடந்தது. பெண்களுக்கான 46 கிலோ பிரிவில் இந்தியாவின் குஷி சந்த், மங் கோலியாவின்அல்தான்சுல் மோதினர். குஷி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

 மற்ற எடைப்பிரிவு பைன்லில் இந்தியாவின் அஹானா சர்மா (50 கிலோ), ஜன்னத் (54 கிலோ), அன்ஷிகா (80+ கிலோ) வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றனர். சிம்ரன்ஜீத் கவுர் (60 கிலோ), ஹர்சிகா (63 கிலோ) வெள்ளி வென்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் கிடைத்தது. .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *