25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


79-வது இந்திய சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையைமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

79-வது இந்திய சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையைமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (15.08.2025) நடைபெற்ற இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வருகை தந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்.,த.கா.ப., அவர்கள் வரவேற்றார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காலை 9.05 மணியளவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.  பின்னர், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக  வெள்ளை நிற புறாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பறக்க விட்டார்.

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 50 காவலர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய 15 மாவட்ட நிலை அலுவலர்களுக்கும், 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமை, 20 மற்றும் 10 ஆண்டுகள் விபத்தில்லா சேவை புரிமைந்தமை, மாநில அளவில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுகள், பசுமை சாதனையாளர் விருதுகளாக என 13 அலுவலர்களுக்கும், சதுரகிரி மலைப்பகுதி ஆக்கிரமிப்பு அகற்றுதலில் சிறப்பாக பணியாற்றிய 7 அலுவலர்களுக்கும் என பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த மொத்தம் 258 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்;ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திருவில்லிபுத்தூர் திரு.தேவராஜ்,இ.வ.ப., திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) திரு.வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு, சிப்காட்) திரு.டி.செங்கோட்டையன், மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை)  திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், விருதுநகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.யோகேஷ் குமார், மாவட்ட நிலை அலுவலர்கள்,  வட்டாட்சியர்கள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News