பஜ்ஜி உப்பி வர....
கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாலை2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால், சோடா மாவு சேர்க்காமலே பஜ்ஜி உப்பி வரும்.
ஒரு கப் கெட்டி அவல்,2 கிண்ணம் பச்சரிசி, சிறிது உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து ஊற்றினால் சுவையான தோசை தயார்.
மோரில் ஊறவைத்த வாழைப்பூவை சிறிது நெய்யில் வதக்கி, துவையல் செய்தால் ருசியாக இருக்கும்.
வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டிவிட்டு, பிறகு தோலை உரித்தால் வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.
முருங்கைக்கீரையை சமைக்கும்போது சிறிதளவு,சர்க்கரையை கலந்து சமைத்தால் ,ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்கும்
0
Leave a Reply