25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஒளியை பயன்படுத்தி தகவல்களை பரிமாறும் சில்லு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒளியை பயன்படுத்தி தகவல்களை பரிமாறும் சில்லு.

உங்கள் ஸ்மார்ட் போன்,  குறைந்த மின்சார செலவில், ஆயிரம் மடங்கு வேகமாக இயங்கி னால் எப்படி இருக்கும்? அமெரிக் காவின், எம்.ஐ.டி., நிலையத்தில்உள்ள பொறியாளர்கள், ஒருபுதியஏ.ஐ., செயலியைஉருவாக்கியுள்ளனர்.இது, தகவல்களை அலசவும், வெளியிடவும், எலக்ட்ரான்களை பயன்படுத்துவதில்லை.

மாறாக, ஒளியை பயன்படுத்தி தகவல்களை பரிமாறுகிறது. இது, செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொடர்பின் எதிர்காலத்தை அடியோடு மாற்றிவிடும்.

இந்த 'ஆப்டிகல் நியூரல் நெட்வொர்க்' சில்லு, தரவுகளை பகுப்பாய்வு செய்யவும், அனுப் பவும் போட்டானிக் கூறுகளை பயன்படுத்துகிறது. இது, மனிதமூளையில் நியூரான்கள் செயல் படும் விதத்தை பிரதிபலிக்கிறது.

ஆனால் இந்த சில்லு, ஒளிக் கற்றைகள் மூலம் கணக்கீடுகளை செய்கிறது. இதன் விளைவாக, குறைந்த மின் செலவில், ஒளி வேகத்தில் இந்த சில்லு இயங்கும்.

 இந்த சில்லு, '6ஜி' நெட்வொர்க் குகள், நிகழ்நேர மொழிபெயர்ப்பு கருவிகள் மற்றும் அதிவேக நிதி அமைப்புகள் போன்ற தொழில்நுட் பங்களை செலுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேலும், ஒளியானது எலக்ட்ரான் களை விட வேகமாக, குறைந்த எதிர்ப்புடன் பயணம் செய்வதால்,முற்றிலும் புதிய கணினி கட்டமைப்புகளுக்கான கதவை திறக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News