25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பயிற்சி) மரு. இரா.ஆனந்தகுமார்,I A S., அவர்கள் எழுதிய வடைப்பூ என்ற நூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வெளியிட்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பயிற்சி) மரு. இரா.ஆனந்தகுமார்,I A S., அவர்கள் எழுதிய வடைப்பூ என்ற நூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வெளியிட்டார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியில்  (18.02.2025) நடைபெற்ற விழாவில் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பயிற்சி) மரு. இரா.ஆனந்தகுமார்,I A S, அவர்கள் எழுதிய வடைப்பூ என்ற நூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வெளியிட்டார்.மரு.இரா.ஆனந்தகுமார் அவர்கள் இதுவரை 10-த்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார். டாக்டர்.இரா.ஆனந்தகுமார் அவர்கள் 2003 ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணித் தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இந்திய ஆட்சிப்பணி அலுவலர். அவர் அடிப்படையில் கால்நடை மருத்துவம் படித்தவர். தமிழ்நாட்டின் முதல் இடம்பெற்று, 2003 ஆம் ஆண்டு தேர்வாகி பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சார் ஆட்சியராக தொடங்கி, மதுரை மாவட்டத்தினுடைய கூடுதல் ஆட்சியர், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக இருந்து சென்னை மாநகராட்சியில் மிக முக்கிய பொறுப்புகளை வகித்து, தற்போது ஊரக வளர்ச்சி துறை பயிற்சி துறை ஆணையராக பணிபுரிந்து கொண்டிருக்கக்கூடியவர். அவர் தன்னுடைய தொடர்ச்சியான வாழ்க்கை அனுபவங்களை நூலாக வடித்திருக்கிறார்.நீங்கள் இந்த பூமியில் இன்னும் 50 ஆண்டுகாலம் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட வேண்டும். கல்லூரியில் படிக்கக்கூடிய மூன்று ஆண்டுகளில் உங்களுடைய பாடத்திட்டத்தை படித்து, செயல்முறை தேர்வுகள் எழுதி மதிப்பெண்களை பெற்று பட்டம் பெறக்கூடிய இந்த கல்வி என்பது 10 விழுக்காடு மட்டுமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்கிறது. மற்ற 90 விழுக்காடு உங்கள் அன்றாட நிகழ்வுகளை நீங்கள் பழகக்கூடிய மனிதர்களை, நீ எதிர்கொள்ளக்கூடிய சமுதாயத்தை நீங்கள் எவ்வாறெல்லாம் கற்றுக்கொண்டு செயல்படுகிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும்; மூன்று விதமான வாழ்க்கை உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை, தொழில் சார்ந்த வாழ்க்கை  ஆகும்.இந்த மூன்றையும் கல்லூரி மாணவ மாணவிகள் கற்றுக்கொள்ள வேண்டும். பாடத்திட்டங்கள் மட்டுமே வழங்காத ஒன்றினை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் நமக்கு மொழியில் இருக்கக்கூடிய புலமையும், அதை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலும் தான்.ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் சொல்லப்படாத ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள் இருக்கிறது. ஏன் ஒருவர் பதிவு செய்ய வேண்டும் என்றால் மனிதர்களுக்கு என்று இருக்கக்கூடிய மிகப் பெரிய பண்புகளை விட அவனுக்கு இல்லாத பண்புகள் மற்ற உயிரினங்களை விட அதிகம். மனிதன் இந்த பூமி பந்தில் மிக வலிமையான உயிரினம். மனிதன் தன்னைவிட 100 மடங்கு உடல் எடையில் இருக்கக்கூடிய யானையை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவன்.

மனிதன் தன்னைவிட வலிமையான புலியையும், சிங்கத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவன். ஏன் அதன் இருப்பை கூட பூமி பந்தில் கேள்விக்குள்ளாக்க கூடியவன் மனிதன். பல மிருகங்களை விட ஏன் எல்லா மிருகங்களை விட மேம்பட்ட பகுத்தறிவு சிந்தனையை ஆறாம் அறிவை கொண்டவன் மனிதன். அப்படிப்பட்ட உயிரினங்களுடைய பரிணாம வளர்ச்சியில் மேன்மையான வடிவத்தை வைக்கக்கூடிய மனிதன் கூட பல உயிரினங்களுடன் ஒப்பிடுகின்ற பொழுது அதனுடைய மரபு வலிமைகள் குறைபடலாம்.மனிதர்களிடம் மரபுக் கடத்தலை எடுத்து பார்த்தால், மரபுக் கடத்தலில் மனிதன் மற்ற உயிரினங்களை விட சற்று கீழ்மட்டமாகவே இருக்கின்றான். அப்படிப்பட்ட மனிதன் இந்த பூமியில் வாழ்வதற்கு இந்த வாழ்க்கை முழுவதும் அனுபவங்கள் தேவைப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் நிகழக்கூடிய  நூற்றுக்கணக்கான அனுபவங்கள்;. ஒரு தனி மனிதனுக்குள் ஒரு நாளில் சொல்லப்படாத அனுபவம் மிக்க 100 கதைகள் இருக்கும். இவையெல்லாம் அவன் பூமிக்குள் செல்கின்ற பொழுது அவன் மறைந்து விட்ட பிறகு , அவனோடு சேர்ந்து அவன் அனுபவங்களும், அவன் கற்ற செல்வங்களும் எல்லாம் புதைக்கப்பட்டு விடுகிறது.

எனவே, மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையை, அனுபவங்களை பதிவு செய்வது என்பது மிக மிக முக்கியமானது. எந்த ஒன்றையும் பதிவு செய்வது, எந்த ஒன்றையும் எழுதுவதும், அதை பேசுவதும் கருத்துக்களை வெளிப்படுத்துவதும் என்பது மிக முக்கியமான பண்பு.  அந்த பண்புதான் கல்லூரியில் மாணவர்கள் பாடத்திட்டங்களுக்கு வெளியே நிச்சயமாக கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. அதை கற்றுக் கொள்வதற்கு இதுபோன்ற நூல்கள் தான் உதவி செய்கிறது.மனிதர்களுக்கு ஒன்றே ஒன்றுதான் தேவைப்படுகிறது. வாழ்வியல் சிக்கல்கள் எதிர்கொள்வதும், தனக்கு வரக்கூடிய துன்பத்தில் இருந்து துன்பங்களை விலக்கி, வாழ்வியல் இன்பங்களை பார்ப்பதும். அதற்கு அவர்களுக்கு அனுபவம் தேவைப்படுகிறது. அந்த அனுபவங்கள் இரண்டு வழிகளில் கிடைக்கும். ஒன்று நாமே தவறு செய்து அவர்களின் மூலமாக கற்றுக்கொண்டு நெறியோடு இருப்பது. இன்னொன்று அடுத்தவர்கள் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வது. முதலாவது விலை மதிப்பு மிக்கவை. இரண்டாவது எளிதில் கிடைப்பது.

 அடுத்தவர்களின் அனுபவங்களிலிருந்து நமக்கான வாழ்வியல் பாடங்;களை கற்றுக்கொள்வது என்பது நமது கற்றலில் மிக முக்கியமான ஒன்று. அது பள்ளி கல்வி பாட புத்தகங்களில் நிகழ்வதில்லை. இதுபோன்ற நிகழ்வுகளில் தான் நிகழ்கிறது. அதற்காக இதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு பணிச்சுமைகளும் மத்தியில் தொடர்ச்சியாக எழுதக்கூடிய மரு.இரா.ஆனந்தகுமார் அவர்களின் நூலை படிப்பது என்பது நம் எல்லோருக்கும் வாழ்வில் அனுபவமாகும். நீங்களும் நிறைய வாசிப்பதற்கும், வாசிப்பின் மூலமாக மொழி ஆற்றலை பெறுவதற்கும், நீங்களும் பயன்படுத்துவதற்கும் இது போன்ற விழாக்களையும் நூல்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள்தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News