சீரக சம்பா வெண் பொங்கல்.
தேவையான பொருட்கள்-
1கப் சீரக சம்பா அரிசி,
அரைகப் பயத்தம்பருப்பு, 1மேஜைகரண்டி நெய்,
தேவையான உப்பு
தாளிக்க:
கால் கப் நெய்,1 மேஜைகரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கியது.
1 மேஜைகரண்டி மிளகு,1 மேஜைகரண்டி சீரகம், 20 முந்திரி,
1 பச்சை மிளகாய், துண்டாக்கியது,சிறுநெல்லிக்காய் அளவு கட்டி பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:-
அரிசி மற்றும் பருப்பை கழுவி குறைந்தது30 நிமிடங்கள் முதல்1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.பிரஷர் குக்கரில் வெண்ணெய் மற்றும் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்(துண்டுகளாக நறுக்கியது), சீரகம், நொறுக்கப்பட்ட மிளகு, முந்திரி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.4 முதல்5 கப் தண்ணீர், பெருங்காயம் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பைச் சேர்த்து நன்கு கலந்து4 முதல்5 விசில் வரை அல்லது வேகும் வரை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலக்கவும், சீரக சம்பா வெண் பொங்கல் தயார்.
0
Leave a Reply