25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அன்பே சிவம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அன்பே சிவம்

அன்பு என்பது விலை மதிப்பற்ற பொக்கிஷம்.ஆத்மார்த்தமாக அன்புதான் அர்த்தமுள்ளதாக இருக்கும். புகழுக்காக 'அன்பு செய்கிறேன்.' என்று கூறிக்கொண்டு வாழ்வதில் என்ன லாபம். வாழ்க்கை வாழ்வதே ஒரு தவம் தான். நம்முடைய வாழ்க்கை  என்ற தவத்தை கடந்து வர மூன்று விஷயங்கள்  தேவை. நோக்கம், லட்சியம், அன்பு ஆகியவை. பிறந்து விட்டோம். பின்பு ஒரு நோக்கத்துடன்  லட்சியத்தை அடைய வேண்டும் என்றால் அன்பு  தேவை. மனிதம் தேவை.

இடுப்பளவு நீரில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை, ஓர் ஏழை விவசாயிகாப்பாற்றினார். மறுநாள் அச்சிறுவனின் பணக்காரத் தந்தை, ஏழை  விவசாயியின் வீடு தேடிவந்து, பணத்தைக்  கொடுத்தால் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்  விவசாயி .விவசாயியின் மகனைப் பார்த்து,இவனை  படிக்க வைப்பது என் பொறுப்பு என்று அவனை  அழைத்துச் சென்றார் பணக்காரர்.

அந்த ஏழைச்சிறுவன் நன்கு படித்து, லண்டனில் பெரிய மருத்துவனாகி, பென்சிலின் மருந்தை கண்டுபிடித்த 'சர் அலெக்சாந்தர் ஃபிளெமிங். அவனைப்  படிக்கவைத்த செல்வந்தரின் மகனுக்கு நிமோனியா  காய்ச்சல். இவருடைய கண்டுபிடிப்பால் சரி செய்யப்பட்டது.

தந்தையால் ஒரு முறையும், மகனால் ஒரு முறையும் காப்பாற்றப்பட்ட அந்த செல்வந்தர் வீட்டுப்பிள்ளை வின்ஸ்டன் சர்ச்சில்.

பயன் கருதாமல் விவசாயி செய்த உதவி.உதவிக்காக நன்றிக்கடன் என்ற விசுவாசத்துடன் கூடிய அன்பு, எந்த அளவுக்கு இரு தலைமுறைகளையும் நிமிரச் செய்திருக்கின்றது.விவசாயி காப்பாற்றி இருந்தாலும், அச்செல்வந்தர் அலட்சியமாக இருந்திருந்தால், இந்த இரண்டு பொக்கிஷங்களை உலகம் இழந்திருக்குமல்லவா?

கிண்ணத்தில் வைத்திருந்த நாணயங்களை சிந்திவிட்டால், அதைப் பொறுக்கி மீண்டும் வைத்துவிடலாம். 'பொருளற்றார் பூப்பர் ஒரு கால்' செல்வத்தை இழந்தவர்கள் சம்பாதித்துவிடலாம். முயற்சி மீண்டும் செய்தால் பிரிந்துபோன செல்வம் திரும்பி வருதல் இயல்புதான்.

அருள் அற்றார் மற்(று) ஆதல் அரிது.

அன்பு, அருள் இல்லாமல் உள்ளம் மறத்துவிட்டால் அவ்வுள்ளத்தில் அன்போ, அருளோ  முளைக்கவே முளைக்காது.

மானசீக பூஜைகள், மந்திரங்கள், ஆசாரங்கள் ஆகியவற்றால் கடவுளின் அருள் கிடைக்கும்.அன்பு செய்ய ,செய்ய நம்முடைய வாழ்க்கை என்ற தவம் சிவமாகின்றது. அன்பே சிவம்என்பது மறுக்க முடியாது.

குணா பாஸ்கர் ராஜா.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *