இராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (09.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகள், சேவைகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு, அப்பணிகள் முறையாகவும், அரசு விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து வருகின்றனர்.
அதன்படி, இராஜபாளையம் அய்யனார் கோவில் மலை அடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சந்தித்து கலந்துரையாடி, அரசின் அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கிறதா என்பது குறித்தும், அவர்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த மலைவாழ் குடும்பங்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து,இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள்,சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள், மற்றும்பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்த திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
பின்னர், இராஜபாளையத்தில் உள்ள ஜெயந்த் மலை வாழ் பழங்குடியினர் மாணவ, மாணவியர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, குடிநீர், சுகாதாரம், வழங்கப்படும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply