25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025 – 2026 ஆம் ஆண்டின் ராபி பருவ   பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.11.2025 என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025 – 2026 ஆம் ஆண்டின் ராபி பருவ  பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.11.2025 என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

.வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு பாசி பயருக்கு ரூ.251/- ஆகவும்,  உளுந்து, துவரை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.252/- ஆகவும், சம்பா-நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.491/- ஆகவும், மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.319/- ஆகவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.136/- ஆகவும், கம்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.160/- ஆகவும், பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.473/- ஆகவும், நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.314 ஆகவும், எள் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.122/- ஆகவும் மற்றும் சூரியகாந்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.188/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு கொத்தமல்லி பயிருக்கு ரூ.583/- எனவும், மிளகாய் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1109/- எனவும், வெங்காயம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1573/- எனவும், வாழைபயிருக்கு ஏக்கருக்கு ரூ.4426/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

                விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ம் ஆண்டின் நடப்பு ராபி பருவத்தில்  பயிர் காப்பீடு பதிவு செய்ய உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு கடைசி நாள் 15.11.2025 ஆகவும், மக்காச்சோளம், கம்பு, துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு 30.11.2025 ஆகவும்,  சம்பா-நெல் மற்றும்  சோளம் பயிருக்கு 16.12.2025 ஆகவும், நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு 30.12.2025  ஆகவும்,  மற்றும் எள் பயிருக்கு 31.01.2026 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் கொத்தமல்லி பயிருக்கு 17.01.2026 ஆகவும்,  மிளகாய் வெங்காயம் பயிர்களுக்கு 31.01.2026 ஆகவும்,  மற்றும் வாழைபயிர்களுக்கு 28.02.2026 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass Book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, வங்கிகள்,  தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் பொது சேவை மையத்தில் கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (Crop Insurance)  கடைசி நேர தாமதத்தினை தவிர்த்து தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News