25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபாடி போட்டி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபாடி போட்டி

விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபாடி போட்டி நடைபெற உள்ளது.
மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரத்தில் 09.04.2024, 10.04.2024 மற்றும் 11.04.2024 ஆகிய தினங்களில் வட்டார அளவிலான கபாடி போட்டிகள் நடைபெற உள்ளது.
அதன்படி, 09.04.2024 அன்று நரிக்குடி வட்டத்தில் இலுப்பையூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சாத்தூர் வட்டத்தில் எட்வர்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வெம்பக்கோட்டை வட்டத்தில் வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வத்திராயிருப்பு வட்டத்தில் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியிலும்,
10.04.2024 அன்று திருச்சுழி வட்டத்தில் எஸ்.பி.கே கல்லூரணி மேல்நிலைப் பள்ளியிலும், விருதுநகர் வட்டத்தில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்திலும், சிவகாசி வட்டத்தில் கே.எம்.கே.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் திருவில்லிபுத்தூர் மங்காபுரம் மேல்நிலைப் பள்ளியிலும்,
11.04.2024 அன்று அருப்புக்கோட்டை வட்டத்தில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காரியாபட்டி வட்டத்தில் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், இராஜபாளையம் வட்டத்தில் தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், நரிக்குடி வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 97912-29305 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08322 என்ற தொலைபேசி எண்ணிலும், சாத்தூர் வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 94864-97010 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 73973-89912 என்ற தொலைபேசி எண்ணிலும், வெம்பக்கோட்டை வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 94864-27621 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08294 என்ற தொலைபேசி எண்ணிலும், வத்திராயிருப்பு வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 89254-91170 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 89258-09644 என்ற தொலைபேசி எண்ணிலும்,

திருச்சுழி வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 94453-83316 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08317 என்ற தொலைபேசி எண்ணிலும், விருதுநகர் வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 97916-34373 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08304 என்ற தொலைபேசி எண்ணிலும், சிவகாசி வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 99444-24654, 98650-71770 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 73973-89921 என்ற தொலைபேசி எண்ணிலும், திருவில்லிபுத்தூர் வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 84282-72694 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 73973-89916 என்ற தொலைபேசி எண்ணிலும்,

அருப்புக்கோட்டை வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 99941-03896 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 73973-89919 என்ற தொலைபேசி எண்ணிலும், காரியாபட்டி வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 94424-18663 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 89258-09649 என்ற தொலைபேசி எண்ணிலும், இராஜபாளையம் வட்டத்திற்கு பொறுப்பு அலுவலரை 97893-83956 என்ற தொலைபேசி எண்ணிலும், உள்ளாட்சி அலுவலரை 74026-08278 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

வட்டார அளவில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.7,000-மும், இரண்டாவது பரிசாக ரூ.5000-மும்,  மூன்றாவது பரிசாக ரூ.3000-மும் வழங்கப்படும்.

 பின்னர் மாவட்ட அளவில் 13.4.2024 அன்று நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50,000-மும், மூன்றாம் பரிசாக இரண்டு அணிகளுக்கு தலா ரூ.25,000-மும் வழங்கப்படும்.
போட்டியின் விதிமுறைகள் :

1. நேர்மையாக மற்றும் 100 % வாக்குப்பதிவினை வலியுறுத்தி 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்/பெண்களை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு கபாடி போட்டி நடத்தப்படுகிறது.
2. ஆண்களுக்கான கபாடி போட்டியானது 11 வட்டாரங்களில் நடத்தப்பட்டு( Selection Match), போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பெற்ற அணிகள் மாவட்ட அளவில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படும்.
3. பெண்களுக்கான கபாடி போட்டியானது மாவட்ட அளவில் மட்டும் நடைபெறும்.
4. போட்டியாளர் குறிப்பிட்ட ஒன்றியத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்;.
5. ஆதார் அட்டை கண்டிப்பான முறையில் எடுத்து வர வேண்டும்.
6. 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள இயலும்.
7. சாதி, கட்சி - தொடர்பான உடைகள் அணிந்து வரக்கூடாது.
8. அனைத்து நிகழ்வுகளிலும் நடுவரின் தீர்ப்பு மட்டுமே இறுதியானது.
9. காலை 06.00 மணிக்குள் அனைத்து அணிகளும் போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும்.
10. ஒன்றியத்தில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.
11. 08.04.2024-அன்று மாலை 6 மணிக்குள் முன்பதிவு கட்டாயம் செய்ய வேண்டும். (இணைப்பு I-ல் உள்ள பொறுப்பு அலுவலர்களிடம்). போட்டி நாளன்று அணிகள் பதிவு செய்ய இயலாது.
12. 3 கட்டமாக வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்படும். (இணைப்பு I-ல் உள்ளவாறு).
13. போட்டிகள் காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறும்.
14. போட்டிகள் இயற்கை ஆடுகளத்தில் நடைபெறும்.
பெண்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு பதிவு செய்திட கீழ்க்கண்ட பொறுப்பு அலுவலரிடம் பதிவு செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
பொறுப்பு அலுவலர்கள் விபரம் :
1. ஏ.பி.எஸ்.ராஜா             - 9488151214
2. பி.கனி முத்துக்குமரன்   - 9994511966
3. பி.விவேகானந்தன்        - 9865071770

இந்த போட்டிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News