25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


கரண்ட் பில் ரீடிங்கில்  மின்சார வாரியம் அதிரடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கரண்ட் பில் ரீடிங்கில் மின்சார வாரியம் அதிரடி

 வீடுகளில், கரண்ட்பில் ரீடிங் எடுப்பதில் நிறைய குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருக்கின்றன.. அதனால்தான், இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் "ஸ்மார்ட்' மீட்டர்" திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான டெண்டர்களையும் விடுத்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.அதேபோல, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) இன்னொரு அதிரடியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, முறைகேடாக காட்டும் மீட்டர்களுக்கு முடிவுகட்ட வீடுகளில், "புளூடூத் ஸ்மார்ட் மீட்டரை" இணைக்கும் திட்டம் உள்ளது.
வீடுகளில் ப்ளூடூத் மீட்டரை பொருத்தி விட்டால், ஃபைபர் ஆப்டிக் போர்ட்கள் மூலம் அதனை கண்காணிக்கலாம். இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம் மொபைல் ஆப்: அதேபோல, 2 மாதங்களுக்கு முன்பு, மின்துறை இன்னொரு அதிரடியை கொண்டுவரப்போவதாக தகவல் வெளியானது. அதாவது, மின் ஊழியர்கள் எடுக்கும் கணக்கெடுப்பு விபரங்களை, கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிப்பதற்காக, புது "மொபைல் செயலி" அறிமுகம் செய்ய போகிறார்களாம்.
முதல்கட்டமாக, உதவி பொறியாளர்களின் போனில் மொபைல் செயலி சேவையை பதிவேற்றம் செய்து தாழ்வழுத்த பிரிவு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் கணக்கெடுக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு பிறகே, வீடுகளுக்கு இந்த செயலியை செயல்படுத்த போவதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்த ஒரு அப்டேட்தான் தற்போது வெளியாகி உள்ளது. துல்லியமான கணக்கு: அதாவது, கடந்த ஆகஸ்ட் முதல், தாழ்வழுத்த பிரிவில் இடம் பெறும், 60,000 தொழில் மற்றும் வணிக இணைப்புகளில், மொபைல் செயலி வாயிலாக, மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் கணக்கெடுப்பு விபரம் துல்லியமாக பதிவாவதை, மின் வாரியம் தற்போது உறுதி செய்திருப்பதால், வீடுகளிலும் இந்த மின் பயன்பாட்டை கணக்கெடுக்கவும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இதற்காக, சோதனை முறையில், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய, 44 மின் பகிர்மான வட்டங்களிலும் தலா, 10 பிரிவு அலுவலகங்களில் வீடுகள், கடைகள் போன்றவற்றில், வருகிற 18ம் தேதி முதல் மொபைல் செயலியில் கணக்கெடுக்குமாறு மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டிருக்கிறதாம்.ரீடிங்: பொதுவாக, மின் ஊழியர்கள், வீடுகளில் வந்து ரீடிங் எடுத்துவிட்டால், அதற்கு பிறகு, தங்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்வது வழக்கம்.. பிறகு அடுத்த சில நாட்களில், மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்படுகிறது.

கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிக்கவே, இந்த புது "மொபைல் செயலி" நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய மொபைல் செயலி அறிமுகத்தினால், உடனுக்குடன், உங்கள் கரண்ட்பில் குறித்த அப்டேட், அடுத்த நொடியே, உங்களுக்கு மெசேஜ் மூலமாக கிடைத்துவிடும் என்கிறார்கள் அதிகாரிகள். செயல்பாடுகள்: இந்த மொபைல் செயலி எப்படி செயல்படும் தெரியுமா? இந்த மொபைல் செயலி, ஊழியர்களின் செல்போனில் டவுன்லோடு செய்யப்படும். அதனுடன் ஒரு, "ஆப்டிகல் கேபிள்" வழங்கப்படும். கணக்கெடுக்கும்போது ஒயரை மீட்டரில் செருகி, போனுடன் இணைத்துவிட்டால் போதும்.. இப்போது செயலியை இயக்கியதும் மீட்டரிலுள்ள மின் பயன்பாடு, அதற்கான கட்டண விபரங்கள், செயலி மற்றும் மின் வாரிய சர்வரில் வந்துவிடும். அடுத்த செகண்டே நுகர்வோருக்கு அந்த SMS சென்றுவிடும்..!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News