25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள தகவல் பகுப்பாளர் பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள தகவல் பகுப்பாளர் பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ்க்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம்:

1. தகவல் பகுப்பாளர் (Data Analyst)

   பணியிடம்   - 01

தொகுப்பூதியம் ரூ.18,536 /-ஒரு மாதத்திற்கு

கல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது:
அடிப்படை கல்வித்தகுதி : புள்ளியியல்/ கணிதம்/ பொருளியல்/ கணினி அறிவியல் (BCA)  பட்டப்படிப்பு சான்று பெற்று இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம் :  கணினி சார்ந்த பணிகளில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு :   42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மேற்குரிய பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் உரிய விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.virudhunagar.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பதவிகளுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Pass port Size)  28.06.2024  மாலை 5.30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
2/830-5 - வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு,
விருதுநகர் - 626 003.
தொலை பேசி எண். 04562-293946.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News