பல கோடி டாலர் சொத்துக்கு அதிபதி எமிர் தமீம் பின் ஹமத் அல் தானி
தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனை, ஆடம்பர சொகுசு படகு, விஐபி விமான நிறுவனம் என பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளின் ஒரே சொந்தக்காரர் எமிர் தமீம் பின் ஹமத் அல் தானி ஆவார்.எமிர் என்பது கத்தார் நாட்டின் உயரிய ஆட்சியாளர் என்பதை குறிக்கும். இதுவரை 11 எமீர்கள் கத்தார் நாட்டில் உள்ளனர். இவர்கள் அல்தானி குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2013ம் ஆண்டு ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு அரச பட்டம் வழங்கப்பட்டது.1980ம் ஆண்டு ஜூன் 3பிறந்த ஷேக் தமீம்(SheikhTamim), முன்னாள் அமீர் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் 4வது மகன் ஆவார்.இவர் லண்டனில் உள்ள Harrow பள்ளியில் தனது ஆரம்ப கால கல்வியை பயின்றார். அதனை தொடர்ந்து 1998ல் இங்கிலாந்தில் உள்ள ராயல் ராணுவ அகாடமியில் பட்டம் பெற்றார்.இங்கிலாந்தில் இருந்து திரும்பிய ஷேக் தமீம் கத்தார் ராணுவத்தில் இரண்டாவது லெப்டினன்ட்ஆக சேவையாற்றினார்.கத்தாரின் எமீர் தமீம் பின் ஹமத் அல் தானி உலக அரசர்களில் 9வது இடத்தில் உள்ளார்.
கத்தார் அரசாங்கத்தை நிர்வகிக்கும் அல்தானி குடும்பத்தின் மொத்த சொத்துமதிப்பு சுமார் 335 பில்லியன் அமெரிக்கடாலர்கள் ஆகும்.3 திருமணங்கள் செய்து கொண்டுள்ள எமிர் தமீம் பின் ஹமத் அல் தானி மொத்தம் 13 குழந்தைகள் உள்ளனர்.ஷேக் தமீம் தனது குடும்பத்துடன் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான சொகுசு அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். DohaRoyalPalaceல் பெரும்பாலான பகுதிகள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டன.இந்த அரண்மனையில் 100க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.500 கார்கள் ஒரே நேரத்தில் இந்த அரண்மனையில் நிறுத்திக் கொள்ள முடியும். அத்துடன் ஷேக் தமீம் தனக்கு சொந்தமாக 3.3 பில்லியன் டாலர் சொகுசு கப்பல் ஒன்றையும் வைத்துள்ளார்.அத்துடன் விஐபிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் விமான நிறுவனம்,BugattitoFerrari,Lamborghini,RollsRoyce ஆகிய நூற்றுக்கணக்கான சொகுசு கார்கள் ஆகியவற்றை ஷேக் தமீம் வைத்துள்ளார்.
0
Leave a Reply