பொது நியாய விலைக் கடைகளில் - POS இயந்திரத்தில் மின்னணு கைரேகை பதிவுகளை 12.02.2025 முதல் 15.02.2025 வரை பதிவு செய்து கொள்ளலாம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மின்னணு குடும்ப அட்டைகளில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) படி வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்ப அட்டைகளான PHH மற்றும் AAY குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் மற்றும் இதர குடும்ப அட்டைகளின் உறுப்பினர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அல்லது அருகிலுள்ள நியாய விலைக் கடைகளில் 12.02.2025 முதல் 15.02.2025 வரை தங்களது கைவிரல் ரேகை பதிவு செய்யலாம்.
மேலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அல்லது அருகிலுள்ள நியாய விலைக் கடை POS இயந்திரத்தில் கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயம் என்பதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply