இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த ஆர். வைஷாலி 8% புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். உலக செஸ் சாம்பியன் ஷிப்பில் ஆட உள்ளார்.
இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த ஆர். வைஷாலி ,சைப்ரஸ்நாட்டில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் 8% பபுள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்ற அவர் ஆண்டின் இறுதியில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் ஜூவென் ஜூனுடன் மோத உள்ளார்.
இந்த நிலையில் 24 வயதான ஆர். வைஷாலி நேற்று அதிகாலை சென்னை திரும்பி னார். விமான நிலையத்தில் எஸ்.டி.ஏ.டி, மற்றும் செஸ் சங்கம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட் டது.
அகில இந்திய செஸ் சம்மேளன தலைமை ஆபரேட்டிங் அதிகாரி ஏ.கே. வர்மா வைஷாலியை நேரில் வர வேற்று கூறுகையில், 'உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு முயற்சிப்போம். இதற்காக முறைப்படி விண்ணப்பிப்போம். இரண்டு இந்தியர்கள் (ஆண்கள் பிரிவில் குகேஷ், பெண்கள் பிரிவில் வைஷாலி) உலக செஸ்சாம்பியன்ஷிப்பில் ஆட இருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றார்.
0
Leave a Reply