பொடுகை அடியோடு விரட்ட இஞ்சி - எலுமிச்சை மாஸ்க்!
பொடுகு பிரச்சனையை அடியோடு விரட்டி ஆரோக்கியமான கூந்தல் பெற உதவும் ஹேர் மாஸ்க்
தேவையான பொருட்கள் - வேப்பிலை -1 கைப்பிடி |இஞ்சி - 3"அளவு | எலுமிச்சை - 1 | மிதமான ஷேம்பு - 2 ஸ்பூன்
செய்முறை
முதலில்இஞ்சி, எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி சுத்தமான பாத்திரம் ஒன்றில் சேர்க்கவும்.
பின் இதனுடன் வேப்பிலை மற்றும் 2 கப் அளவு நீர் சேர்த்து 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, அடுப்பில் இருந்து இறக்கவும்.
நன்கு ஆறியதும், வடிகட்டி - திப்பைகளை நீக்கி தனி ஒரு கோப்பையில் சேர்க்கவும். பின் இதனுடன் ஷேம்பு சேர்த்து கலக்கி இந்த பேக்கினை கூந்தலுக்கு அப்ளை செய்து 45 நிமிடங்கள் வரை உலர விடவும். பின், மிதமான ஷேம்பு பயன்படுத்தி கூந்தலை அலசவும்.
இயற்கை எண்ணெயை தக்க வைக்கும் இந்த மாஸ்க் ஆனது, கூந்தல் வறட்சி பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவி செய்கிறது.
ஆன்டி பாக்டீரியல் பண்பு கொண்ட எலுமிச்சை, வேப்பிலை பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த மாஸ்க், பொடுகு பிரச்சனையை போக்குகிறது.
தலைமுடி வேர் கால்களை பலபடுத்தி, கூந்தல் உதிர்வை தடுக்கும் இந்த மாஸ்க் ஆனது, அடர்த்தியான கூந்தல் பெற உதவி செய்கிறது.
0
Leave a Reply