25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


உலகின் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் தங்கம் 10வது இடத்தை பெறுகின்றது 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகின் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் தங்கம் 10வது இடத்தை பெறுகின்றது 

அதிக விலை கொண்ட உலோகமாக தங்கம் பார்க்கப்படுகின்றது.ஒவ்வாரு மனிதனின் செல்வத்தை குறிக்கும் பொருளாகவும் தங்கம் காணப்படுகின்றது.தங்கம் தான் ஒரு வீட்டின் பொருளாதாரத்தையும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கிறது என்றால் மிகையாகாது.முதலீடு என்றாலே தங்கம் தான் என கருதப்படும் நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் வாங்க சுமார் ரூ.5,800 க்கு மேல் செலவு செய்ய வேண்டும். ஆனால் இந்த உலகில் தங்கத்தை விட அதிக விலை கொண்ட பொருட்கள் எல்லாம் இருக்கின்றன. உலகில் விலை உயர்ந்த பொருட்களை பட்டியல் படுத்தினால் அதில் தங்கம் பல்வேறு உலோகங்களின் பின்னால் தான் இருக்கின்றது தங்கத்தை மிஞ்சிய எத்தனையோ பொருட்கள் சாதாரண மக்களால் நினைத்தும் பார்க்க முடியாத விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கதிரியக்க தனிமமாக ஃபிரான்சியம் அறியப்படுகின்றது. ஒரு கிராம் ஃபிரான்சியத்தின் விலை ரூ.8,313 கோடி ஆகும்.குறித்த தனிமத்தின் ஆயுட்காலம் 22 நிமிடங்கள் மாத்திரமே ஆகும்.22 நிமிடங்களின் பின்னர் இந்த உலோகம் வேறு உலோகமாக மாறிவிடும். இந்த தனிமம் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றாலும் உலகின் மிக விலை உயர்ந்த தனிமமாக ஃபிரான்சியமே காணப்படுகின்றது.

 ஃபிரான்சியத்திற்கு அடுத்தப்படியாக விலையுயர்ந்த உலோகமாக காலிஃபோர்னியா பார்க்கப்படுகின்றது.கடந்த1950 ஆம் ஆண்டு முதன்முதலில் காலிஃபோர்னியா பல்கழைகழகத்தில் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாகவே இந்த தனிமத்திற்கு அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் காலிஃபோர்னியாவின் விலை ரூ.2.22 கோடி ஆகும். இதனை ஆண்டுக்கு அரை கிராம் மட்டுமே உருவாக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளமை 

அனைத்து உயிரினங்களிலும் காணப்படும் கார்பன் என்பதும் மிகவும் விலையுயர்ந்த தனிமங்களில் ஒன்றாகும். வைர வடிவிலான கார்பன் ஒரு கிராமின் பெறுமதி ரூ.54 லட்சம் ஆகும்அணு குண்டுகள், அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் புளூட்டோனியம் எனும் தனிமம் வைரத்திற்கு அடுத்த படியாக விலையுயர்ந்ததாக கருதப்படுகின்றது.இவை எளிதில் தீப்பற்ற கூடியது என்பதால் இதனை சேமித்து வைப்பது மிகவும் கடினம். ஒரு கிராம் ரூ.3.3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது. 

ஸ்காண்டியமும் ஒரு விலையுயர்ந்த தனிமமாகும். இத மிகவும் குறைந்த அளவில் தான் பூமியில் காணப்படுகின்றது.ஒரு கிராம் ஸ்காண்டியத்தின் விலை ரூ.22,000 வரை விற்பனையாகின்றது. 

பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகம் பயன்படுத்தப்படும்,லுடேடியம் பூமியில் உள்ள அரிய உலோகமாகும்.இது அல்கலைஷேன், ஹைட்ரஜனேட்டம், பாலிமரைசேஷன், போன்ற செயல்முறைகளில் அதிகமாக பயன்பாட்டில் இருக்கின்றது. ஒரு கிராம் லுடேடியம் ரூ.5,7000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

நம்மில் பெரும்பாலனவர்களுக்கு பிளாட்டினம் பற்றி தெரிந்திருக்கும். இந்த தனிமம் ஆபரணங்கள் செய்யவும் பயன்படுகின்றது. இதன் தேவை மிக அதிகமாக இருந்தாலும், ஆண்டுக்கு சில நூறு டண்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிராம் பிளாட்டினத்தின் பெறுமதி  ரூ.48,0000 ஆகும்.

 உலகின் மிகவும் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த உலோகங்களில் தங்கம் முக்கிய இடம் வகிக்கின்றது. உலகம் முழுவதும் தங்கத்திற்கு அதிக தேவை காணப்படுகின்றது.உலகின் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் தங்கம் 10வது இடத்தை பெறுகின்றது. ஒரு கிராம் தங்கம் தற்போது 5800 வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News