செண்பகப்தோப்பில் நடத்தும் பசுமை விழிப்புணர்வு பயிற்சி முகாம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (18.02.2025) தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து செண்பகப்தோப்பில் நடத்தும் பசுமை விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு, பசுமை பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளாகத்தை சிறப்பான முறையில் பாதுகாக்கும் வகையில் பசுமை பள்ளி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, மழைநீர் சேகரிப்பு, காய்கறி தோட்டங்கள் அமைத்தல், கழிவுநீர் மறுசுழற்சி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மாணவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது மாணவர்கள் மூலம் பள்ளி வளாகங்களுக்குள் இயற்கை வளங்களின் நுகர்வைத் தணிக்கை செய்கிறது மற்றும் விலைமதிப்பற்ற வளங்களை வீணாக்குவதைக் குறைக்க நடைமுறை தீர்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பள்ளிகள் நல்ல சுற்றுச்சூழல் மேலாளர்களாக மாற உதவுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, செண்பகப்தோப்பில் நடைபெறும் பசுமை விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு செல்லும் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 50 மாணவர்கள் செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழியனுப்பி வைத்தார். இந்த பசுமை விழிப்புணர்வு பயிற்சி முகாம் 18.02.2025 முதல் 21.02.2025 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திரு.தேவராஜ்,இ.வ.ப., ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply