குருமாவுக்கு அரைக்கும் பொது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா கெட்டியான பதத்தில் வரும்.
சாம்பார் நல்ல கலரா வர ,நல்ல பழுத்த தக்காளி பழம்2எடுத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். பின்பு சாம்பார் தாளிக்கும் போது தக்காளி விழுதையும் சேர்த்து தாளித்து, சாம்பார் வைத்து பாருங்கள் சுவையும்,கலரும் அருமையாக இருக்கும்.குக்கரில் பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்தால் பஞ்சு போல பருப்பு வெந்து வரும்.
குருமாவுக்கு அரைக்கும் பொது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா கெட்டியான பதத்தில் வரும்.
பப்பாளி காய் துண்டுகளை சர்க்கரை பாகில் நாள் கணக்கில் வைத்துவிட்டு, பிறகு அதை கேக், பன் போன்றவைகளில் சேர்த்து டூட்டி புருட்டி தயாரிக்கலாம்.
சேனை கிழங்கை வேக வைக்கும் முன், வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து,சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும், கிழங்கை போடவும். விரைவில் பதமாக வெந்து பக்குவமாகவும், சுவையாகவும் இருக்கும்.
அடைக்கு அரைக்கும்போது மரவள்ளிக்கிழங்கை உரித்து சில துண்டுகள் சேர்த்து அரைக்கலாம். உருளைக்கிழங்கையும் துண்டுகளாக்கி போட்டு அரைக்கலாம். இவ்வாறு செய்தால் அடை மொறுமொறுவென்று இருக்கும்.
0
Leave a Reply