25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் குல்வீர் சிங் தங்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் குல்வீர் சிங் தங்கம் வென்றார்.

தென் கொரியாவில் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இந்தியா சார்பில் 58 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் 18 வயது பூஜா பங்கேற்றார். 2023ல் நடந்த 23 ஆசிய சாம்பியன் ஷிப்பில் தங்கம் வென்ற இவர், நேற்று அதிகபட்சம் 1.89 மீ., உயரம் தாண்டி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 

ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியாவின் குல்வீர் சிங், 13:24.77 நிமிடத்தில் வந்து தங்கப்ப தக்கம் வென்றார். இது ஆசிய சாம்பி யன்ஷிப் சாதனை ஆனது. முன்னதாக 2015ல் கத்தார் போட்டியில் முகமது அல் கார்னி (கத்தார்), 13:34.47 நிமி டத்தில் வந்து இருந்தார்.குல்வீர் வென்ற இரண்டாவது தங்கம் இது. முன்னதாக 10,000 மீ., ஓட்டத்தில் சாதித்து இருந்தார்.   கோபால் சைனி (1981), பஹ துர் பிரசாத் (1993), லட்சமணனுக்கு (2017) அடுத்து 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற வீரர் குல்வீர் சிங்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *