ஆரோக்கியம் தரும் மருத்துவ குறிப்புகள் .
தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.
வாழைப்பூவைப் பொடிப் பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை க்கீரையை யும் சேர்த் து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.
வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல் பித்தக் கோளாறு நீங்கும்.
மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த் து சாப்பிட்டு வர நரம்பு சம்பந்த மான உபாதைகள் நீங்கிவிடும்..
கொப்பரைத் தேக்காயை கசகசா வுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
ஓருதேக்கரண்டி நெல்லிசாறு அரைத்தேக்கரண்டி தேன் கலந்து வைத்து தினமும் காலையில் பருகி வந்தால் கண் நோய் வராது.
இஞ்சியைச் சாறெடுத்து கொஞ்சம் உப்புபோட்டு குடித்தால் வயிற்று வலி, வயிற்று போக்கு குணமாகிவிடும்.
தினமும் ஒரு கொய்பாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் வராது.
இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கி விடும்.
0
Leave a Reply