25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


குழந்தைகளுக்கு ப்ளூ ஆதார் கார்டை ஆன்லைனில் பெறுவது எப்படி?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குழந்தைகளுக்கு ப்ளூ ஆதார் கார்டை ஆன்லைனில் பெறுவது எப்படி?

இந்தியாவில் உள்ள மிக முக்கியமான ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்று. பேங்க் முதல் முதலீட்டுத் திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு பயன்படும். இந்த ஆதார் கார்டில் உங்களது பெயர் முகவரி மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய விஷயங்கள் அடங்கியிருக்கும்கேஒய்சி சரி பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆவணங்களில் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணம்\ ஆகும். முன்பெல்லாம் பெரியவர்களுக்கு மட்டும் இருந்த ஆதார் 2018 ஆம் ஆண்டு முதல் சிறிய குழந்தைகளுக்கும் வந்துள்ளது. அதனை பால்ய ஆதார் கார்டு அல்லது ப்ளூ ஆதார் கார்டு எனக் கூறுவார்கள்.இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களின் விவரங்களையும் உள்ளடக்கி வைத்திருப்பதால் இந்த ஆவணத்தை பல்வேறு\ துறைகளிலும் முக்கியமான சான்றாக கருதப்படுகிறது. இந்த ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. இதில் 12 இலக்க எண் இருக்கும். இந்த 12 இலக்க எண் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். 2018 ஆம் ஆண்டு இந்த ப்ளூ ஆதார் கார்டை அரசு பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரை கொண்டுவர முடிவு செய்தது. இந்த ஆதார் கார்டு அதனை வாங்கிய ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். இந்த ஆதார் பெற அந்த குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆதார் கார்டை பெற பெரிதாக ஆவணம் ஒன்றும் தேவையில்லை. பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனையில் பெற்றோர்கள் பயன்படுத்திய டிஸ்சார்ஜ் சீட் போதுமானது. மேலும் அதற்கு பதிலாக குழந்தைகள் பள்ளியில் சேர்த்திருந்தால் அந்த ஐடி கார்டை கூட பயன்படுத்தலாம் பல்வேறு அரசாங்க நலத்திட்டங்களை பெரும் வகையில் இந்த ஆதார் கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது பள்ளியில் சேர்க்கும்போது இந்த அட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்த அட்டையில் உள்ள எழுத்துகள் நீல நிறத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கும். ஐந்து வயதுடைய குழந்தைகளுக்கு அதில் உள்ள ஆதார் நம்பரை பயிற்றுவிக்கும் வகையில் UIDAI இந்த கார்டுகளை உருவாக்கியுள்ளது.பெரியவர்களைப் போல அல்லாமல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த பயோமெட்ரிக்ஸும் எடுக்கப்பட மாட்டாது. அவர்களின் பெற்றோரின் யுஐடியுடன் இணைக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே இந்த ப்ளூ ஆதாருக்கு போதுமானது. மேலும் இந்த குழந்தைகள் 5 மற்றும் 15 வயதை அடையும்போது பத்து விரல்கள் கருவிழி மற்றும் முக புகைப்படம் ஆகியவை கொண்டு இந்த ஆதாரை புதுப்பிக்க வேண்டும்.

ப்ளூ ஆதார் கார்டு பெற அதன் அதிகாரபூர்வ இணையதளமான, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்த்திற்குச் செல்ல வேண்டும். பிறகு "My Aadhar" என்பதற்குச் செல்லவும். "My Aadhar" பகுதியைக் கண்டறிந்து, "Book an appointment" என்பதைக் கிளிக் செய்யவும். "Child Aadhaar" என்பதைத் தேர்வு செய்யவும். "New Aadhar" என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண் மற்றும் பாதுகாப்புக் குறியீட்டை (கேப்ட்சா) உள்ளிடவும். "Relationship with Head of Family" என்பதன் கீழ், "Child (0-5 years)" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் குழந்தையின் விவரங்களை நிரப்பவும். உங்கள் குழந்தையின் பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்களை கவனமாக உள்ளிடவும். உங்களிடம் தேவையான ஆவணங்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: உங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் உங்கள் சொந்த ஆதார் அட்டை.உங்கள் ஆபாயிண்ட்மென்ட் ஐ பதிவு செய்யுங்கள். அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் வசதியான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்யவும். உங்கள் முன்பதிவை உறுதிப்படுதிக் கொள்ளவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News