பொரியல்களில் உப்பு அதிகமானால்
அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்.
தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது என்னை வறுத்து பொடி செய்து போட்டால் ரூசி அதிகமாக இருக்கும்
தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் சூசியாக இருக்கும்.
ரவா உப்புமா செய்யும்போதுபாதி தண்ணீரும்,பாதி தேங்காய் பால் அல்லது பசும்பால் சேர்த்து செய்தால் உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.
ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ரசத்தைக் கொதிக்க விட்டு, மிளகு சீரகத்தூள் போட்டு, அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து விடுங்கள்.
கத்தரிக்காய்,கோவைக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட் கேரட் போன்றவற்றுடன் வெங்காயம் நன்கு சேரும். எனவே, இந்த வகைப் பொரியல்களில் உப்பு அதிகமானால், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிச் சேர்த்து விடலாம்.
0
Leave a Reply