இக்குழந்தைகளை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால், இவ்வறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
சிறுவன் இப்ராஹிம் (16) கேரளா மாநிலம், மலப்புரம் குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டார். கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் கோவிட் பெருந்தொற்றினால் தந்தை இறந்து விட்டநிலையில் தாயார் எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில் இருந்த சிறுவன். இப்ராஹிம் (16) என்பவரை கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக தற்காலிக வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பத்தில் இணைத்துள்ளனர்.
சிறுமி. பத்ரா பேபி (17) அவருடைய தாயார் கேரளா மாநிலத்தில் இருந்து வரும் நிலையில், தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும், அவர் சிறுமியை கவனித்து கொள்வதற்கு தயாராக இல்லை என்று தாயார் தெரிவித்துள்ளார் என்பதால் சிறுமி பத்ரா பேபி (17) என்பவரை கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக தற்காலிக வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
இக்குழந்தைகளை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால், இவ்வறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், குழந்தையை உரிமை கோரி எவரும் தொடர்பு கொள்ளாத நிலையில், கேரளா மாநிலம், மலப்புரம் குழந்தைகள் நலக்குழுவினால் குழந்தைகளுக்கு சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5. வ.உ.சி. நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் - 626003. தொலைபேசி - 04562 - 293946 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply