இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நேச்சர் கிளப் தொடக்க விழா
இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நேச்சர் கிளப் தொடக்க விழா (Nature Club Inauguration) பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு. சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்) கலந்து கொண்டு சிறப்பு செய்தார். பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று விருந்தினரை அறிமுகம் செய்ய, தாளாளர் திருமதி.ஆனந்தி அவருக்கு பரிசுகள் வழங்கி கெளரவம் செய்தார்.சிறப்பு விருந்தினர் தமது உரையில் சிறு வயதில் தாங்கள் கேட்டு ரசித்த இயற்கையைப் பற்றிய பாடல்கள் தற்பொழுது திரைப்படங்களில் இடம் பெறவில்லை என்றும் மாடுகள் நிறக் குருடானவை, பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் நினைவாற்றல் கிடையாது ,பழிவாங்கும் உணர்ச்சி அவைகளுக்கு கிடையாது, மனிதர்களுக்கு மட்டுமே உண்டு என்றும் கூறினார்.
மேலும், இயற்கையின் படைப்புகளான காட்டு விலங்குகள் தனக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை பிற உயிரினங்களுக்கு விட்டுவிடும் தன்மை கொண்டவை. ஆனால் மனிதர்களாகிய நாம் விலங்குகளின் இருப்பிடங்களை ஆக்கிரமிப்பு செய்து விட்டு அவைகள் ஊருக்குள் புகுந்துவிட்டன என்று கூறிக் கொண்டிருக்கிறோம் என்பதையும்,தென்னிந்திய மக்களுக்கு வற்றாத ஜீவநதியாக மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது, அவற்றைப் பேணி பாதுகாக்க வேண்டியதன் அவசியம், தமிழ்நாட்டில் அதிக மழை பொழியும் இடம் தேவாரம் , உயிர் வாழ தேவையான ஆக்ஸிஜனை நமக்குத் தருவதில் கடல் முக்கிய பங்கு வகிக்கிறது, துரித உணவு வகைகளை தவிர்க்க வேண்டும், நாம் பயன்படுத்தக் கூடியப் பொருட்கள் மறு சுழற்சிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்றும் Refuse, Reduce, Reuse, Recycle என்ற கொள்கையினை அனைவரும் கடைபிடித்தால் இயற்கையை பாதுகாக்கலாம் என்பதை மாணவர்களுக்கு அழகாக எடுத்துக் கூறினார்.நிகழ்ச்சியில் மாணவர்கள் இயற்கை பற்றிய சேர்ந்திசைப் பாடல் பாடினர். உலக யானைகள் தினத்தன்று நடைபெற்றஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார். நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திரு.வெங்கடபெருமாள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
0
Leave a Reply