25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியா - பாகிஸ்தான் சண்டையால் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி  மீண்டும் இன்று தொடக்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா - பாகிஸ்தான் சண்டையால் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி  மீண்டும் இன்று தொடக்கம்.

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டி இந்தியாபாகிஸ்தான் சண்டையால் திடீரென ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. மேலும் முக்கியமான வெளி நாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிக்காக கடைசி கட்டத்தில் கிளம்புவது அணிகளின் சரியான கலவையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதைஎல்லாம் கணக்கு போட்டே சில அணிகள் தற்காலிகமாக மாற்று வீரர்களை சேர்த்துள்ளனர். 

இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன. 13லீக் மட்டுமே மிஞ்சியுள்ளது.. முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன. மற்ற 7 அணிகள் பிளே-ஆப்சுற்றின் 4 இடத்துக்கு மல்லுக்கட்டுகின்றன.

புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப்சுற்றுக்கு தகுதி பெறும். இதில் முதல் 2இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி காணும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும்.தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.

3வது,4வதுஇடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் தோற்கும் அணிவெளியேறும். வெற்றி பெறும் அணி,முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் இறுதிப்போட் டிக்கான 2வது தகுதி சுற்றில் சந்திக்கும். இந்த ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தும் அணி2-வதுஅணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News