ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில் இந்தியஅணி வெண்கலம் வென்றது.
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில், நடந்தது. நேற்று, சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதின.
தொடர்ந்து அசத்திய இந்தியாவுக்கு 57 வது நிமிடத்தில் 'பெனால்டி ஸ்டிரோக்' கிடைத்தது. எளிதான இந்த வாய்ப்பை, திவாரி ஷர்தானந்த் கோலாக மாற்ற, இந்தியா 3-2 என முந்தியது. அடுத்த நிமிடம் அன்மோல் எக்கா (58வது) 'பெனால்டி கார்னரில்' கோல் அடிக்க, ரசி கர்கள் உற்சாகம் அடைந்தனர்.
முடிவில் இந்திய அணி, 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக வெண்கலம் கைப்பற்றியது.9 ஆண்டுகளுக்கு பின்ஜூனியர் உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. 2016-ல் சாம்பியன் பட்டம்வென்றிருந்தது.
0
Leave a Reply