வாசல் தெளித்து கோலம் போடுவதும் பூமி பூஜையே.
ஒரு கோடீஸ்வரர் குடும்பத்தோடு வந்து காஞ்சியில் மஹா சுவாமியிடம் தங்கள் குறைகள் நீங்கிட வழி கூறுமாறு வேண்டினர். சில நிமிட மௌனத்திற்குப் பின் ஆச்சாரியார். அன்றாடமும் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது உண்டா என்று கேட்டார்.யாரால் செய்யப் படுகிறது?" என்று வினவினார். வேலைக்காரி தான் என்றாள் கோடீஸ்வரரின் மனைவி, மஹா ஸ்வாமிகள் நிதானமாக, "பூமி பூஜை செய்த புண்ணியம் வேலைக்காரியை அடைந்து விட்டது!" என்றார். எனவே நாம் அனைவரும் நம் குடும்பம் சிறக்க பூமி பூஜையை தினமும் நாமே செய்ய வேண்டும் என ஆசீர்வாதம் செய்தார்.
0
Leave a Reply