உலக கோப்பை செஸ் தொடரில் நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார் கார்த்திக் வெங்கடராமன்.
உலக கோப்பை செஸ் 11வது சீசன் கோவாவில் , 4வது சுற்றுக்கு இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஹரிகிரிஷ்ணா பிரக்ஞானந்தா, பிரனவ் முன்னேறினர். 'நடப்புஉலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ் 3வது சுற்றில் தோல்வியடைந்தார்.
நேற்று, 3வது சுற்றுக்கான 'டை பிரேக்கர்' நடந்தது. இதில் தமிழகத்தின் கார்த்திக் வெங்கடராமன், ருமேனியாவின் போக்டன்-டேனியல் டீக் மோதினர். முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டியில் கார்த்திக் வெற்றி பெற்றார். முடிவில் கார்த்திக் 2.5- 1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்தியா சார்பில் 5 பேர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.
0
Leave a Reply