வெள்ளிப் பாத்திரங்கள் புதியவை போல் இருக்க
காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒருசில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.
குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய முந்திரி, பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.
புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.
வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரும்,டைல்ஸ் மற்றும் சிங்க்கை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.
வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.
0
Leave a Reply