17 ஆண்டுகள் செனாப் ரயில் பாலத்தை செதுக்கிய பேராசிரியை மாதவி லதா.
செனாப் நதியின் ஆற்றுப்படுகையில் இருந்து, 1,178 அடி உயரத்துக்கு மேலே ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ராவில், கட்டப்பட்ட ரயில் பாலத்தை பிரதமர் மோடி 6 th JUNE திறந்து வைத்தார்.உலகின் மிக உயரமான இந்த பாலம், 1,486 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது..
1992ல், ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலையில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக்., பட்டம் பெற்றார். 2000ல், ஐ.ஐ.டி., சென்னையில் புவி தொழில்நுட்ப பொறியி யலில் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையான மாதவி லதா.செனாப் ரயில் பாலத் தின் வெற்றிகரமான கட்டு மானத்திற்கு புவிதொழில் நுட்ப ஆலோசகராக, 17 ஆண்டுகள் பணிபுரிந்தார் .முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர்.
பல்வேறு விருதுகளை பெற்ற அவருக்கு, 2021ல், இந்திய புவி தொழில்நுட்ப சங்கத்தால், சிறந்த பெண் புவி தொழில்நுட்ப ஆராய்ச்சி யாளர் விருது வழங்கப்பட்டது. 2022ல், இந்தியாவின் ஸ்டீம் நிறுவனத்தில், சிறந்த 75 பெண்களில் ஒருவராக இடம்பிடித்தார்.
0
Leave a Reply